விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு பிரபல இயக்குனர்களுடன் கைகோர்க்கும் நடிகர் கமலஹாசன்.!

kamal
kamal

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது அரசியலின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் தனது முழு நேர கவனத்தையும் செலுத்தி வந்த நடிகர் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்திற்காக முழு நேர நடிகராக மாறினார்.

இது நடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பல கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறு வயதான பிறகும் கமலஹாசனின் நடிப்பு திறமையை பார்த்து திரைப்பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இவ்வாறு மாசாக ரீஎன்ட்ரி கொடுத்து அனைத்து நடிகர்களையும் மிரள வைத்துள்ளார். இவ்வாறு இளம் நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு தனது சுறுசுறுப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் இவ்வாறு தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்த இவருக்கு தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களின் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இவ்வாறு தற்பொழுது வரையிலும் மக்கள் மத்தியில் தன்னுடைய செல்வாக்கு குறையவில்லை என்பதை அறிந்துக்கொண்ட கமலஹாசன் தற்பொழுது அடுத்தடுத்து நான்கு திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஏற்கனவே இவர் நடிப்பில் பாதியிலேயே நின்று போன இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் உருவாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது அஜித்தின் ‘ஏ 61’ திரைப்படத்தை இயக்கி வரும் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் கமலஹாசனை வைத்து அடுத்து திரைப்படத்தினை இயக்க இருக்கிறாராம். மேலும் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை எனவும் கூறப்படுகிறது.

பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் கிராம கதையை மையமாக வைத்து கிராமத்தாக கமலஹாசன் நடிக்க இருக்கிறார். இந்தத் திரைப்படம் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்ததாக விக்ரம் 2 திரைப்படத்தில் நடிப்பதற்காக விக்ரம் தயாராகி வருகிறார். லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து திரைப்படம் இயக்க உள்ள நிலையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக விக்ரம் 2 உருவாகும் என கூறப்படுகிறது.

இவ்வாறு நடிகர் கமலஹாசன் அடுத்தடுத்த நான்கு திரைப்படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகிவுள்ளார். மேலும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு வித்தியாசமான கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக விக்ரம் திரைப்படம் போலவே வெற்றியடைய எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் பட குழுவினர்கள் வெளியிடுவார்கள்.