சினிமாவில் நடித்து வந்து ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் ஆர்வம் வந்ததால் தொடர்ந்து அரசியலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வந்த நிலையில் சமீப காலங்களாக மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் தான் நடிகர் கமலஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஏற்பட்டதால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் முதலில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் நடிகர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கலந்து கொள்கிறார். அந்த வகையில் சற்று முன்பு உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் அந்த வீடியோவில் கமலஹாசனிடம் இயக்குனர் சங்கர் அன்றைய தினம் எவ்வாறு எப்படிப்பட்ட காட்சியில் நடிக்க வேண்டும் என்பதற்கான விளக்கும் காட்சி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களை தொடர்ந்து இந்த படத்தில் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள்.
#Indian2 from today.
@Udhaystalin @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ pic.twitter.com/TsI4LR6caE— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2022
மேலும் இவர்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விக்ரம் திரைப்படத்தினை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்து அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.