Kamal Haasan Net worth: உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் நிலையில் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். முக்கியமாக கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
இவ்வாறு படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக சினிமாவில் முதலீடு செய்து படங்கள் தயாரிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். 69 வயதில் கமலின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
KH 234 Update : 8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணையும் முன்னணி நடிகை.! லிப்லாக் இருக்குமே..
2021ஆம் ஆண்டு கமலின் சொத்து மதிப்பு 50 மில்லியன் மட்டும் தான் இருந்தது கிட்டத்தட்ட 230க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் கமல் இவ்வளவு மட்டுமே சேர்த்து வைத்தது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது. ஏனென்றால் கமல் தனது சினிமா கெரியரில் ஏகப்பட்ட வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார்.
இடையில் தோல்வி பெற்றாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமலின் நிறைய திரைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பல கோடி வசூல் செய்து வருகிறது. இவ்வாறு சமீப காலங்களாக விஸ்வரூப வளர்ச்சி அடைந்த கமல் ராஜ்கமல் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.
பழிவாங்கும் மாயா.. சில்லறையை செதரவிட்ட அர்ச்சனா.! ஆச்சரியத்தில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள்
இப்படி தற்போது இவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 100 மில்லியன் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதனால் இவருடைய சம்பளமும் உயர்ந்துள்ளது. இவ்வாறு பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் கமல் உயர் ரக வாகனங்களையும் நிறைய வைத்திருக்கிறாராம். சொல்லப்போனால் விஜய், ரஜினி போன்றவர்களை விட கமலின் சொத்து மதிப்பு குறைவு தான் எனவும் கூறப்படுகிறது.