சினிமாவுலகில் வாரத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளியாகின்றன அப்படி வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு புதிய சாதனையை செய்வதோடு பல்வேறு டாப் நடிகர்களின் படங்களின் வசூல் தொடங்கி அனைத்தையும் ஓவர்டேக் செய்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.
அந்த வகையில் அஜித் படத்தை விஜய் முழுவதும் விஜய்யின் படத்தை அஜித் முறியடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி படம் உலக அளவில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பற்றிய ஓரளவு சுமாரான வசூலை அள்ளி அசத்தியது.
இதற்கு ஒரு வகையில் காரணம் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து என கூறப்படுகிறது ஏனென்றால் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அரபி குத்து பாடல் யூடியூபில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது சொல்லப் போனால் அரபி குத்து பாடல் சினிமா பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை எல்லோரும் ஆட்டம் போட்டு அசத்தினார்கள்.
அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிடித்த பாடலாக மாறியது இந்த பாடல் யூடிபில் மட்டுமே சுமார் 393 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து கண்டுகளித்துள்ளனர். வெறும் மூன்று நாட்களில் மட்டுமே அரபி குத்து பாடல் சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு இருந்தது.
இப்பொழுது அந்த சாதனையை முறியடிக்கப்பட்டுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் வெளியாகி பெரும் மூன்று நாட்கள் மட்டுமே சுமார் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது இதன் மூலம் அரபி குத்து பாடலை முறை அடித்து மாஸ் காட்டுகிறது கமலின பத்தல பத்தல பாடல்.