முதன் முறையாக கமல் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் போது கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிவித்திருந்தார்கள்.
இதற்கு சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும் கதை குறித்த தகவலை பற்றியும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
பொதுவாகவே கமலஹாசன் நாட்டுப்புற கலைகள் மீது அதிக ஆர்வமுடையவர் அந்த வகையில் இத்திரைப்படமும் ஒரு நாட்டுப்புற மிக்க படம் என்றும் இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இந்த திரைப்படத்தில் தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் இணைந்துள்ள இந்த திரைப்படத்தினை இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் முதல் பான் இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.மீண்டும் இத்திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவு இணைய உள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய பெரிதாக எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனைப் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமான கமல் மற்றும் தற்பொழுது உள்ள நடிகர்களில் ரசிகர்களின் பேவரைட் நடிகரான சிவகார்த்திகேயன் இவ்வாறு இருவரும் இணைந்து நடித்து வருவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.