தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருவர் ஜெயம் ரவி. இவர் தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த அகிலன் திரைப்படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும் படம் சுமாராக ஓடி வெற்றியை பதிவு செய்தது அதிலிருந்து வெளிவர மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
இந்த படம் நாளை கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே முதல் பாகம் வெளிவந்த பிளக்பஸ்டர் அடுத்த நிலையில் இந்த படமும் வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது படத்தில் ஜெயம் ரவி உடன் கைகோர்த்து விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளி வருவதற்கு முன்பாக பல்வேறு இடங்களில் பட குழு பிரமோஷன் செய்து வந்தது அதன்படி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும், தன்னுடைய சினிமா பயணம் உங்கள் குறித்தும் பேசினார். அவர் சொன்னது.. திரைப்படங்களில் நல்லவன் கதாபாத்திரங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.
காரணம் அதில் ஒரே மாதிரியான நடிப்பை தான் வெளிப்படுத்த முடியும்.. வில்லன் வேடங்கள் அப்படியல்ல கெட்டவனாக நடிக்கும் போது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.. பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக எப்படி நடிக்க வேண்டும் என்று மணிரத்தினம் நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் யாரையும் காப்பி அடிக்கவில்லை ஏற்கனவே சிவாஜி கணேசன் ராஜராஜ சோழனாக நடித்திருக்கிறார் அந்த படத்தை பார்க்காமல் தான் நடித்தேன் அதை பார்த்திருந்தால் அவருடைய நடிப்பின் தாக்கம் எனக்குள் வந்திருக்கும் எனது நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடு ஆகாது. என்னால் எப்படி முடியுமோ அப்படி நடித்தேன் என்றார்.