தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம்ரவி பெரும்பாலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவர் சுவாரசியமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வமுடையவர்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக மற்ற திரைப்படங்களில் நடிப்பதற்கான வேலையை பார்த்து வருகிறார்.இப்படிப்பட்ட நிலையில் இவர் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் பட நடிகை ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தால் பெரிதாக நடிகைகள் சினிமாவில் பிரபலமடைய முடியாது என்ற ஒன்று எப்பொழுதும் மாறாமல் இருந்து வருகிறது.சொல்லப் போனால் ஏராளமான நடிகைகளுக்கு இப்படி நடந்துள்ளது ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பு சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பிரியங்கா மோகன் தொடர்ந்து நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்து வருவதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
அந்த வகையில் பிரபல நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஜெயம் ரவியின் புதிய திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. மேலும் இவர்கள் நடிக்கவுள்ள திரைப்படத்தை ராஜேஷ் இயக்க ஹரி ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.