நடிகர் ஜீவாவின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா.? எப்பவும் Handsome தான்..

jeeva-2
jeeva-2

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜீவா. நடிகர் ஜீவா திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சௌவுத்ரயின் மகனும், பல நடிகரான ரமேஷ் அவரது சகோதரரும் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டு வெளிவந்த ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தித்திக்குதே ராம், டிஷ்யூம், கீர்த்தி சக்கரா, அரண், ஈ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். முக்கியமாக இவர் 2009ஆம் ஆண்டு வெளிவந்த சிவா மனசுல சக்தி திரைப்படம் தான் இவருக்கு நல்ல ஒரு பிரபலத்தை தந்தது. இந்த படத்தில் மச்சு ஒரு போட்டோ சொல்லேன் என்ற கலகலப்பான காமெடியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

மேலும் இந்த படத்தில் சந்தானம்-ஜீவா இவர்களுடைய காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் மூலம் பிரபலமாக பிறகு நல்ல தரமான கதை அம்சமுள்ள திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் கற்றது தமிழ், கோ, சங்கிலி புங்கிலி கதவ தொற, கலகலப்பு 2 போன்ற படங்கள் தொடர்ந்து இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்டது.

jeeva 1
jeeva 1

இவ்வாறு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜீவா இதுவரையிலும் தன்னுடைய மனைவி மகனை பெரிதாக வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது இல்லை. அந்த வகையில் ஜீவா 2007ஆம் ஆண்டு சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு ஸ்பர்ஷா  என்ற மகன் இருக்கிறார்.

jeeva
jeeva

இந்நிலையில் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் இதுவரையிலும் யாரும் ஜீவாவின் மனைவியின் புகைப்படத்தை பார்த்ததில்லை மேலும் இவருடைய திருமண புகைப்படங்களும் வெளிவராமல் இருந்து வந்த நிலையில் தற்போது இவருடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

jeeva 3
jeeva 3