மனைவியுடன் ஜெயம்ரவி மகளிர் தினத்திற்காக என்ன செய்து உள்ளார் பாருங்கள்!! என்ன மனுஷன்யா!! வைரலாகும் வீடியோ.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகர், நடிகைகள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சிலர் பெண்களை ஊக்குவிப்பதற்காக கவிதைகளை பதிவிட்டு வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அம்மா, அக்கா, மனைவி,பாட்டி போன்றோரின் புகைப்படங்களை பதிவிட்டு குடும்பத்தின் தூண்கள் என கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜெயம்ரவி மகளிர் தினத்தையொட்டி தனது மனைவியுடன் செய்த சவாலை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் கேப்ஷனாக பெண்களால் எதுவும் செய்ய முடியும். உங்கள் பிரியமானவர்களிடம் நீங்களும் முயற்சித்து பாருங்கள். அனைவருக்கும் வலிமையான மகளிர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை பல லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து லைக்குகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.