ஜெயம் ரவி ஆளுதான் ஸ்மார்ட் என்று பார்த்தால் சொத்து மதிப்பு அதைவிட பிரமிக்க வைக்கிறது.!

jayam ravi
jayam ravi

Actor Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தனது தந்தை திரைப்பட எடிட்டராக பணியாற்றி வந்ததன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அப்படி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் அமோக வெற்றியினை பெற்றது. முதல் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஜெயம் ரவி இதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அம்மாவிற்கு மகனுக்கும் இடையே இருக்கும் பாசத்தை உணர்த்தும் வகையில் அமைந்த படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு இரண்டாவது படமும் வெற்றியினை பெற்றதனால் தொடர்ந்து தனது அண்ணனின் படங்களில் நடித்து வந்தார். அப்படி சந்தோஷம் சுப்பிரமணியம், தனி ஒருவன் ஆகிய படங்களும் வெற்றி பெற்றது. இவ்வாறு இதனைத் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்பொழுது ஜெயம் ரவி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த ப்ரோமோவம் ஏற்கனவே வெளியான நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு இன்று 43வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ஜெயம் ரவிக்கு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்பொழுது இவருடைய சொத்து மதிப்பு ரூபாய் 73 கோடியில் இருந்து ரூபாய் 75 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஜெயம் ரவி ஒரு படத்திற்கு 2.5 முதல் 5 கோடி வரை வாங்குகிறாராம். இதனையடுத்து விளம்பரங்கள் மற்றும் சோசியல் மீடியாக்களின் வழியாகவும் ஓரளவிற்கு பணம் வருகிறது. இவர் தனது வருமானத்தை முதலீடு செய்து வருகிறார் மேலும் சொந்தமாக ஆடி கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் போன்றவற்றையும் வைத்துள்ளார் என கூறப்படுகிறது.