கையில் கிட்டாருடன் நடிகர் ஜெயம் ரவியின் மகன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

jayam-ravi

பொதுவாக சினிமாவில் மிகப் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் வாரிசுகளை சினிமாவில் களம் இறங்குவது வழக்கம் தான் அந்த வகையில் பிரபலத்தின் மகன் என்ற காரணத்தினால் அவருக்கு பரிசும் பாராட்டும் கிடைத்துவிடாது அவருக்கு திறமை இருந்தால் மட்டுமே சினிமா கொண்டாடும்.

அந்த வகையில் பல்வேறு சினிமா பிரபலங்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்தவகையில் கமலின் மகள் சுருதிஹாசன், விக்ரமின் மகன்  துருவ் விக்ரம், சிவகுமாரின் மகன் சூர்யா மற்றும் கார்த்திக் என பலரை சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் எடிட்டரின் மகனாக இருந்த ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமானது பலருக்கும் வியக்கத்தக்க விஷயமாக இருந்தது. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த டிக் டிக் டிக் என்ற திரைப்படம்  வித்தியாசமான கதைக்களம் உடையதாக இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி என் முதல் மகன் ஆரவ் ஒரு க்யூட்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதனை தொடர்ந்து வேறு ஏதேனும் திரைப் படத்தில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் தான் வெளிவந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவியின் மகன் கையில் கிட்டார் வைத்துக்கொண்டு வாசிப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது இதை பார்த்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமாண்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

jayam ravi son
jayam ravi son