தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பலரும் தான் சம்பாதிக்கும் பெரும்பாலான காசுகளை பெரிய அளவில் செலவழிக்காமல் பங்களா, கார் என எதையாவது வாங்கி போடுவது வழக்கம் அதிலும் குறிப்பாக ரஜினி அஜித் விஜய் போன்றவர்கள் முக்கிய இடத்தில் இடம் வாங்கி வீடு கட்டுவது வழக்கம்.
குறிப்பாக அரசியல் பிரபலங்கள் தொடங்கிய சினிமா பிரபலங்கள் வரை போயஸ் கார்டனில் இடம் வாங்கி வீடு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் ரஜினி போன்ற பல பிரபலங்கள் அங்கு தான் இருக்கின்றனர். அதனால் காசு வைத்திருக்கும் சினிமா நடிகர்கள் பிரபலங்கள் பலரும் போயஸ் கார்டன் ஏரியாவில் வீடு வாங்க துடித்தனர்.
ஆனால் அந்தக் காலம் மாறிப்போய் தற்போது பீச் மற்றும் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் இடத்தை வாங்கி வீடு கட்டி வருகின்றனர். காரணம் சிட்டி சைடில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் இருப்பதால் ரொம்ப அவதிப்படுகின்றனர் அதை தவிர்க்கும் வகையில் சினிமா பிரபலங்கள் பலரும்..
தற்போது பிரபலங்கள் பலரும் நீலாங்கரை பக்கம் பங்களா வாங்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் அஜித் விஜய் சிவகார்த்திகேயனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது நீலாங்கரை பக்கம் அருகில் மிகப்பெரிய பங்களா ஒன்றை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சிட்டியில் போக்குவரத்து நெரிசல் மாட்டிக்கொண்டு வாழும் அந்த வாழ்க்கையே வேண்டாம் என முடிவு எடுத்து தான் நீலாங்கரை பக்கம் நடிகர் ஜெயம் ரவி வீடு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.