உலகநாயகன் கமலஹாசன் ஒரு கட்டத்தில் அரசியல் பிரவேசம் கண்டு அதிலேயே முழு ஈடுபாடு செய்து வந்தார் இதனால் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் போனது. இப்ப என்ன நினைத்தாரோ என்னவோ திடீரென சினிமா பக்கம் திரும்பி தொடர்ந்து அதில் முழு ஈடுபாடு செலுத்தி வருகிறார் படங்களில் நடிப்பதும் தயாரிப்பதும் ஆக இருக்கிறார்.
முதலாவதாக லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்த்து விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது இப்படி இருக்க நடிகர் கமலும் அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார்.
முதலாவதாக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜயின் 68 வது திரைப்படத்தை தயாரிக்க கமலஹாசன் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அதுவும் ஒர்க் அவுட் ஆகும் பட்சத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவே மிகப்பெரிய வசூலை அள்ள கணக்கு போட்டுள்ளது கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம்.
அதே சமயம் இந்த நிறுவனம் சிறு பட்ஜெட் படங்களையும் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் வரை கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ண ஆசைப்படுகின்றனர் காரணம் அண்மை காலமாக ஓரிரு தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்கிறது அந்த வகையில் லைகா ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து கமலின் தயாரிப்பு நிறுவனத்தில் படத்தை தயாரித்தால் எந்த பிரச்சனையும் வராது.
என கணக்கு போடும் நடிகர்கள் கமலிடம் தனது படத்தை தயாரிக்குமாறு கேட்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ ஜெயம் ரவி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த நிலையில் அண்மைக்காலமாக அவரது படங்கள் தோல்வியை தழுவியுள்ளது வெற்றிப்படத்தை கொடுக்க தற்போது ஜெயம் ரவி கமலுக்கு போன் செய்து தனது ஒரு புதிய படத்தை நீங்கள் தயாரித்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அதன் மூலம் நான் வெற்றி பெற வேண்டும் என ஜெயம் ரவி கமலுடன் கேட்டுக்கொண்டுள்ளாராம்.