மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இவர்களை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்றார்கள். இந்நிலைகள் இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி இந்த வாய்ப்பை எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள் எனக்கு தெரியாது மணிரத்தினம் கூப்பிட்டார் சென்றேன், நடித்தேன் என்று கூறினேன் இந்த கதாபாத்திரம் கிடைத்ததற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது.
இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த பொழுது நான் சினிமாவை துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது நீண்ட வருடங்களாக உழைக்கிறேன் அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனது கிடைத்திருக்கிறது என நினைக்கிறேன் ரஜினி சாரும், கமல் சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பினால் தான் முன்னுக்கு வந்தார்கள்.அப்படிப்பட்ட உழைப்பால் நான் எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்துள்ளது என நம்புகிறேன்.
பேச்சால் ஒருவரை மாற்ற முடியுமா என்று நினைத்தேன் ஆனால் அது மணிரத்தினம் சாரல் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன. ஏனென்றால் அருண்மொழிவர்மன் மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார்.
அவர் சொல்லி முடித்தோம் ஒரு மூடு கிரியேட் ஆச்சு அப்படியே வீட்டுக்கு சென்றேன் எப்பொழுது பார்த்தாலும் அதே மூடில் இருந்தேன் இதனால் வீட்டில் திட்டு வாங்கினேன். ஆறு மாதத்தில் அதே மூடில் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன் இவரிடம் நடித்தது பெரும் பாக்கியம் என்று கூறினார்.
இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள்.