தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வத்துடன் நடித்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. தற்பொழுது இவர் அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தை பூலோகம் படத்தினை இயக்க கல்யாண் இயக்கி வருகிறார். இவர்களுடைய கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் அகிலன் படம் முழுக்க முழுக்க கடல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்த படத்தில் கடல் கொள்ளையனாக தான் ஜெயம் ரவியின் நடித்து வருகிறார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வரும் நிலையில் அவர் போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களை தொடர்ந்து தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்த வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக பட குழுவினர்கள் களமிறங்கி இருக்கின்றனர். இந்த படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அகிலன் படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சியஸ் இசையமைக்க, விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில், கணேஷ்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மேலும் இந்த படத்தினை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது இப்படிப்பட்ட நிலையில் அகிலன் படப்பிடிப்பின் பொழுது லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஜெயம் ரவியை சந்தித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது எனவே ஜெயம் ரவி விக்ரம் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல வதந்திகள் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் அகிலன் பட ப்ரமோஷனில் கலந்துக் கொண்ட ஜெயம் ரவி அந்த புகைப்படம் குறித்த தகவலை பகிர்ந்து உள்ளார்.
அவர் கூறியதாவது, அகிலன் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அங்கு விக்ரம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது அப்பொழுதுதான் அகிலன் பட செட்டிற்க்கு லோகேஷ் கனகராஜ் வர இந்த புகைப்படம் அங்கு எடுத்துக் கொண்டோம் என தெரிவித்தார். மேலும் மாநகரம் படம் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் தனக்கு கதை சொன்னதாகவும் ஆனால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் ஜெயம் ரவி கூறிய நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.