actor jayam ravi act as a child star in this movie: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் பல பிரபலங்கள் இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரங்களாக சிறிய கதாபாத்திரத்திலும் நடித்தவர்கள் தான். அப்படி இருக்கும் வகையில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி இதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
அனைவருக்குமே ஜெயம்ரவி முதன்முதலில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் என்று தான் தெரியும், ஆனால் ஜெயம் ரவி பிரபல தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது தான் உண்மை.
அந்த திரைப்படத்தின் காட்சியை பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவரின் சிறுவயது காட்சியை பார்த்து நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் எனவும் வருணித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியின் அப்பா ஒரு எடிட்டர், அதனால்தான் ஜெயம் ரவிக்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது, பிரபல தெலுங்கு திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அப்பா பணியாற்றும்போது ஜெயம் ரவிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அதனால் ஒரு சிறிய காட்சிகளில் ஜெயம் ரவி நடித்து உள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது முன்னணி நடிகராக வளர்ந்துள்ள ரவிக்கு மே ஒன்றாம் தேதி பூமி திரைப்படம் வெளியாக இருந்தது, ஆனால் தற்பொழுது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி.
Ha ha @actor_jayamravi broooo Azhago Azhagguuu ???? @jayam_mohanraja pic.twitter.com/givVpMRDL2
— Sathish (@actorsathish) May 13, 2020