தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் வெங்கட்பிரபு சினிமாவில் ஆரம்பத்தில் நடிகராக தனது பயணத்தை தொடர்ந்து ஒரு கட்டத்தில் சிறப்பான படங்களை கொடுக்க ஆரம்பித்தார். அந்த வகையில் சென்னை 600028 மற்றும் அதன் இரண்டாம் பாகம், அஜித்தை வைத்து மங்காத்தா ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டார். இப்படி இருந்த நிலையில் கடைசியாக கூட சிம்புவை வைத்து மாநாடு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து இருந்தார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க டைம் லூப்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. படத்தில் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருந்தனர். அதிலும் குறிப்பாக எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பு வேற லெவல் இந்த திரைப்படம் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் ரசிக்கும் படியும் இருந்ததால் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை அள்ளி சாதனை படைத்தது இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெய்யும் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாராம் என அது குறித்து அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். வெங்கட்பிரபு என்னை மாநாடு திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார் என்னிடமும் அதை சொன்னார்.
அதற்காக என்னை ஒரு தடவை பாண்டிச்சேரி வர சொன்னார் நானும் போயிருந்தேன் ஆனால் அப்போது புயல் காரணமாக படத்தின் ஷூட்டிங் எடுக்க முடியாததால் சென்னை திரும்பினர். பின் சென்னையில் தொடர்ந்து படமாக்கப்பட்டது ஒரு சமயத்தில் நான் போன் செய்து என்னை மாநாடு திரைப்படத்தில் நடிக்க சொன்னீர்களே என்ன ஆச்சு என்று கேட்டேன் அதற்கு ஒரு வழியாக படமெடுத்தாச்சி என கூறிவிட்டனர்.
மாநாடு திரைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது படம் வேற லெவல் இதுதான் வெங்கட்பிரபுவின் படம் என கூறினார். மேலும் எனது பார்டி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் சிவா, சத்யராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். இதில் ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன் இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியம் என கூறி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார் ஜெய்.