தமிழ் சினிமா உலகில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட கூடாதா என பல நடிகர் நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்படி இவரது படங்களில் நடித்த ஒரு சில பிரபலங்கள் தற்போது அதிகப்படியான படவாய்ப்பு பெற்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர்.
அந்த வகையில் தளபதி விஜயுடன் 2002ஆம் ஆண்டு நடிகர் ஜெய் பகவதி படத்தில் இணைந்தார் அதன்பிறகு நடிகர் ஜெய்க்கு சினிமாவுலகில் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்க தொடங்கியது. அதை சரியாக பயன்படுத்தி நடிகர் ஜெய் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
ஆனால் அண்மைகாலமாக நடிகர் ஜெய்க்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தற்போது வாய்ப்பு கேட்டு நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் சுற்றித்திரிந்து வருகிறார். இதனால் ஜெய் தளபதி விஜய்யை சந்தித்து வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருந்தாராம். ஒரு கட்டத்தில் நடிகர் விஜய், ஜெய்யிடம் நீ ஹீரோவாகிட்ட..
அப்புறம் ஏன் உனக்கு சின்ன ரோல் என அடித்து துரத்தினாலும் ஜெய் மீண்டும் மீண்டும் வருவதால் ஒவ்வொரு தடவையும் அவரை அழைத்து அட்வைஸ் கூறுகிறார் நடிகர் விஜய். ஒரு ஹீரோ 2,3 தோல்விப் படங்களைக் கொடுத்தால் தாங்குவார்கள் 4 அல்லது 5 தோல்விப் படங்களைக் கொடுத்து விட்டால்..
அடுத்த படம் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக கொடுத்தால் மட்டுமே சினிமா பீல்டில் இருக்க முடியும் என நடிகர் ஜெய்க்கு அறிவுரை கொடுத்துள்ளார் விஜய். நடிகர் விஜய் சொன்னதை நடிகர் ஜெய் சரியாக செய்திருந்தால் இன்று அவர் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருந்திருப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.