அஞ்சலியை காலி செய்தது போல் பிரபல நடிகையை துவம்சம் செய்ய போகும் நடிகர் ஜெய்.? சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்காது லே..

jai
jai

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் முதன்முதலாக சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்ததால் அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிக எளிமையாக அடைந்தார். ஒவ்வொரு நடிகர்களும் தனக்கென ஒரு ஸ்டைலை தேர்ந்தெடுத்து அதன் வழியில் பயணித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஜெய் அவர்களும் தனக்கு ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு அந்த வகையில் பல திரைப்படங்களை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை தொடர்ந்து சென்னை 28 சரோஜா, வாமணன், கோவா, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்பொழுதும், ராஜா ராணி, வடகறி என பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு காலகட்டத்தில் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரத்தையும் நடிகை அஞ்சலிக்காக செலவிட ஆரம்பித்தார் அதனால் அஞ்சலியுடன் கிசுகிசுக்கப்பட்டார் இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் லிவிங் டு கெதர் முறைப்படி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

பிறகு சில கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார்  அந்த வெப் சீரியஸ் இல் நடிகை வாணி போஜன் அவர்களும் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்பொழுது இருவரும் நெருங்கி பழகி வருவதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் சமீபகாலமாக வாணி போஜன் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் ஜெய் இருக்கிறார் எனவும்  கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும். வாணி போஜன் அவர்களுக்கு கதை சொல்ல வரும்   இயக்குனர்கள் வாணி போஜனுடன் ஜெய் இருப்பதை பார்த்துவிட்டு கதை சொல்ல தயக்கம் காட்டி வருவதாகவும் பின்பு  அடுத்த முறை வந்து கதை கூறுகிறேன் என கதை சொல்லாமல் சென்று விடுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் வாணி போஜன் அவர்களுடன் ஜெய் அமர்ந்து கொண்டு வாணி போஜன் நடிக்கும் கதையை கேட்டு வருவதாக கூறப்படுகிறது ஏற்கனவே நடிகை அஞ்சலியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்த ஜெய், அஞ்சலி படப்பிடிப்பில் கலந்து கொண்ட பொழுது இயக்குனர் அஞ்சலியை கடுமையாக பேசியதால் இயக்குனரை ஜெய் அடித்து விட்டதாக தகவல் வெளியானது. அதனால் அஞ்சலி மார்க்கெட் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

பின்பு ஜெய் அடிக்கடி மது அருந்துவதால் அஞ்சலி மற்றும் ஜெய் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது அதனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்தார்கள் மது அருந்துவதை நிறுத்தி விட்டதாக கூறப்படும் நிலையில் வாணி போஜன் எங்கு சென்றாலும் அங்கு ஜெய் செல்வதாக கூறப்படுகிறது அதே போல் வாணி போஜன் புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமானால் ஜெய் படப்பிடிப்பிற்கு வந்து அமர்ந்து கொள்கிறாராம்.

ஏற்கனவே அஞ்சலி விவகாரத்தில் இயக்குனருடன் சண்டை போட்ட ஜெய் வாணி போஜன் படபிடிப்பில் ஜெய் வருவதால் புதிய திரைப்படங்களுக்கு கதை சொல்லவும் கமிட் செய்யவும் பலரும் தயக்கம் காட்டி வருகிறார்கள்..