Rajini : தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி இளம் நடிகர்கள் வரை தங்களுடைய படங்களின் தேவைக்காக நடிகைகளுடன் முத்த காட்சிகளில் ஈடுபடுவது வழக்கம்.. ஆனால் ஒரே ஒரு தமிழ் நடிகர் நடிகர் மட்டும் இதுவரை 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும்..
ஒரு லிப் லாக் காட்சி கூட நடித்ததே கிடையாது என்பது தான் குறிப்பிடத்தக்கது அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல.. தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக வரும் ரஜினி தான்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வெற்றி பெறமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
‘இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த திரைப்படத்தின் வசூல் குறையப்போவதில்லை என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது என்னவென்றால்.. அந்த மாதிரி காட்சிகள் நடித்தால் மக்கள் மத்தியில் தன்னால் நல்ல நடிகர் என்ற பெயரை எடுக்க முடியாது என திடமாக நம்பினார்..
அதனால் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கவில்லை என கூறினார் மேலும் அவர் ஒரு நல்ல மனிதர். அவருடன் நான் மூன்று படம் பண்ணியிருக்கிறேன் அவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்புகளை தர வேண்டும் என நினைக்கக்கூடியவர்.
ஒரு நேரத்தில் பிரபு மற்றும் கார்த்திக் போன்றவர்களின் மார்க்கெட் சரிந்த நிலையில் தன்னுடன் நடிக்க வைத்து அழகு பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறினார் ரங்கநாதன். இதை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.