ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு அழகாக இருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாணின் மனைவி.! வைரலாகும் புகைப்படம்..

harish-kalyan

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்பொழுது தனக்கு திருமணம் முடிந்துவிட்ட தகவலை அதிகாரப்பூர்வமாக சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஹரிஷ் கல்யாண் இன்று காலை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெண் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் .

எனவே இவருக்கு திருமணம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது மேலும் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக இது குறித்து ஹரிஷ் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ‘என்னுடைய குழந்தை பருவத்திலிருந்து எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள் அதேபோலவே இப்பொழுது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள் ஒவ்வொரு வெற்றியும் மயில் கலையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்தியான பகுதியாகும்.

harish kalyan
harish kalyan

இப்பொழுது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன் எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் பத்திரிக்கை நபர்கள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கை பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்பொழுதும் எப்பொழுதும் உங்கள் அனைவரிடம் இருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனக்கூறி அன்புடன் ஹரிஷ் கல்யாண் என தெரிவித்துள்ளார். என் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள நிலையில் இது குறித்து ரசிகர்கள் இவருடைய மனைவி மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.