எவ்வளவு அடி விழுந்தாலும் நான் எழுவேன்.. நீ மேல வர பாரு – நடிகர் கோபாலுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித்

Ajith
Ajith

Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒவ்வொரு நடிகரும் ஆரம்பத்தில் அவமானங்களையும், அசிங்கங்களையும் பட்டு தான் இந்த இடத்திற்கு இருக்கின்றனர் குறிப்பாக அஜித் எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

அப்பொழுது பலரும் இவரை  அசிங்கப்படுத்திய அவமானப்படுத்தியது உண்டு ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டி கொள்ளாமல் தன்னுடைய வேலையில் தீவிரமாக இருந்ததால் தற்போது உச்சத்தில் இருக்கிறார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆட்டத்தை ஆரம்பித்த குணசேகரன்.. கில்லியை வைத்து காய் நகர்த்தும் கதிர்.! மருமகள்களை பாடாயப்படுத்தும் ஜான்சிராணி

வெளிநாடுகளில் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அருண் விஜய், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் போன்றவர்கள் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் குணசித்திர நடிகர் கோபால் அஜித் பற்றி பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால்.. அஜித்தின் சிட்டிசன் படத்தில் நடித்திருக்கிறேன் காதல் கோட்டை சமயங்களில் எங்களுடன் ரொம்ப அன்பாக இருப்பார். என் வாழ்க்கையில் அஜித் சார் மறக்க முடியாத விழயம்..

விக் வைத்துள்ளாரா நடிகர் விஜய்? லியோ மூவி ஹேர் ஸ்டைல் மரண மாஸ்.. உண்மைகளைப் பகிர்ந்த விஜய்யின் ஹேர் ஸ்டைலிஸ்ட்

BBC பத்திரிகையில் டிஸ்கவரியில் என்னை எடுத்து இருக்கிறார்கள் சார் உங்களை எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறேன் என்று அவரிடம் நேராக சொன்னேன் அப்பொழுது அவர் என் தோள் மேல் கை போட்டு கோபால் நீங்க மேல வாங்க.. என்னை ஏன் சொல்றீங்க நான் எப்படியோ வந்துடுவேன். நீங்க வாங்க என கூறினார் இப்படி ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை.. அஜித் ரொம்ப புத்திசாலி என கூறினார்.