சிவகார்த்திகேயன் பட நடிகையுடன் இணைந்த கவின்.! இசையமைப்பவர் இவர்தான்..

kavin-2
kavin-2

தொலைக்காட்சியின் மூலம் பிரபலமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து வருபவர் தான் நடிகர் கவின். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கவின் நடிப்பில் அடுத்ததாக புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் படம் நடிகை இணைந்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சின்னத்திரையில் சில ஆண்டு காலங்களாக தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த கவின் நடிப்பில் கடைசியாக டாடா படம் வெளியாகி வசூல் சாதனையை பெற்றது. இதனை அடுத்து திரையரங்குகளில் மட்டும் அல்லாமல் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்தது. இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து கவின் வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர்களும் இவரை வைத்து படம் இயக்குவதில் ஆர்வம் காமித்து வருகின்றனர். அந்த வகையில் கவின் அடுத்த படத்தினை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்க இருக்கும் நிலையில் ரோமியோ பிரின்சஸ் ராகுல் இந்த படத்தினை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களை தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது எனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

kavin
kavin

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் மற்றும் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் தனுஷின் கேப்டன் மில்லர், எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

kavin 1
kavin 1

இவ்வாறு கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு டாடா பட வெற்றிக்கு பிறகு அனிருத் இசையமைப்பில், நடிகை பிரியங்கா மோகனுடன் இணைந்திருப்பது பாராட்டக்கூடிய ஒரு விஷயமாக விளங்குகிறது.