புதிய சொகுசு காரை வாங்கிய ஃபஹத் பாசில்.. எத்தனை கோடி தெரியுமா? வீட்டில் வரிசை கட்டி நிற்கும் கார்கள் லிஸ்ட்

Fahadh Faasil 2
Fahadh Faasil 2

மலையாள முன்னணி நடிகர் ஃபஹத் பாசில் தற்பொழுது தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி தற்பொழுது இவர் வாங்கி இருக்கும் சொகுசு கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் பலவற்றிலும் நடித்து கொடிகட்டி பரந்து வரும் ஃபஹத் பாசில் பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் ஃபஹத் பாஸில் அறிமுகமான நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். வில்லனாக கலங்கி வரும் இவர் கார் வாங்குவதில் மிகவும் ஆர்வமுடையவர்.

Fahadh Faasil
Fahadh Faasil

அப்படி சமீபத்தில் தனது 9வது வருட திருமண நாளை கொண்டாடிய நிலையில் அப்பொழுது புதிய காரை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் டிபெண்டர் டிபன்டர் மாடல் காரை ஃபஹத் பாசில் வாங்கி இருக்கிறாராம். கேரளாவில் இதன் ஆன் ரோடு விலை சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Fahadh Faasil
Fahadh Faasil

இவரிடம் ஏற்கனவே ஒரு Porsche 911 Carrera S கார் உள்ளது இந்தக் காரின் டாப் மாடல் விலை சுமார் 2.9 கோடியாகும். இதனை அடுத்து Range Rover நிறுவனத்தின் Vogue மாடல் கார் ஒன்றையும், Mercedes Benz நிறுவனத்தின் E class கார் ஒன்றையும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் விலை 3.4 கோடி மற்றும் 80 லட்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வேறு சில சொகுசு கார்களையும் வைத்துள்ளாராம்.