எதிர்பார்ப்புடன் இருந்த துரு விக்ரமின் படத்தை தள்ளிப்போட்ட மாரிசெல்வராஜ்.. இதற்கெல்லாம் இந்த நடிகர் தான் காரணம்.!

maari selvaraj
maari selvaraj

தனது இரண்டு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் தற்போது உள்ள முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருக்கும் ஒரு நம்பிக்கை இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மாரிசெல்வராஜ்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் இரண்டு திரைப்படங்களும் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்தை தருவதாக அமைந்தது. அதோடு இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் முன்பே வந்தது.

துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படத்தை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு தற்போது இவர் தனது அப்பாவுடன் இணைந்து சியான் விக்ரம் 60 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில்  பா ரஞ்சித் ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறை வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதற்கான முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளார். இதில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.

dhuru vikram
dhuru vikram

இத்திரைப்படத்திற்கு முன்பு ஏராளமான திரை படங்களை கைவசம் வைத்துள்ளார் பா ரஞ்சித். எனவே தற்பொழுது துரு விக்ரம் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை தொடங்க முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக மாரி செல்வராஜ் உஷாராக தனுஷிடம் ஒரு கதையை கூறியுள்ளார் அதற்கு தனுஷும் ஓகே சொல்லிவிட்டாராம்.

dhanush 4
dhanush 4

இதன் காரணமாக மீண்டும் மாரிசெல்வராஜ் மற்றும் தனுஷின் கூட்டணியில் ஒரு திரைப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இப்படிப்பட்ட நிலை துரு விக்ரமின் படம் குறுகிய காலத்தில் தயாரிப்பதற்கு திட்டமிட்டு இருப்பதால் இவரின் படத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என்று கூறப்படுகிறது. இந்த அனைத்துக்கும் தனுஷ் என்ன முடிவு எடுக்கிறாரோ அதை பொறுத்துதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.