தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். மிகக் குறுகிய வயதிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து மட்டுமில்லாமல் பாலிவுட் கோலிவுட் என அனைத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த திரைப்படத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, பார்த்திபன், ரீமாசென் போன்ற பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். முதல் பாகத்தில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்தார் செல்வராகவன் ஆனால் அது முடியாமல் போனது.
மேலும் தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் தனுஷ் அவர்கள் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் இவர் அகோரியாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் தனுஷ் அகோரி வேடத்தில் தீவிர சிவபக்தராக இருப்பது போல் உருவாக்கிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது மட்டுமல்லாமல் இயக்குனர் செல்வராகவனையும் கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.