இன்று பிறந்தநாள் காணும் நடிகர் தனுஷின் “முழு சொத்து மதிப்பு” இத்தனை கோடியா.?

dhanush
dhanush

Dhanush : தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ தனுஷ் இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் குடும்பம், சினிமா இரண்டிலும் வெற்றிநடை கொண்டு.. வந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது பிரிந்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினி ஒரு பக்கம் தனது அப்பாவை வைத்து லால் சலாம் படத்தை எடுக்க.. தனுசு தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் வாத்தி படம் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றதை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடிந்துள்ளார்.

அடுத்து தனது 50 வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார். இன்று பிறந்தநாள் காணும் தனுஷுக்கு  கேப்டன் மில்லர் படக்குழு 12 மணிக்கு டீசரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள் அன்னதானம், பரிசு பொருட்களைக் கொடுத்து அழகு பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனுஷின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு சுமார் 30 கோடியில் இருந்து 50 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தனுஷுக்கு போயஸ் கார்டனில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு வீட்டை கட்டி உள்ளார் மேலும் ஆழ்வார்பேட்டையில் 18 கோடியில் ஒரு சொகுசு வீடு ஒன்றும் உள்ளது.

அவரிடம் ஜாகுவார்  XE, ஃபோர்ட் மஸ்டாங்க், பெண்ட்லி, ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட், ஆடி A8, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.