நடிகர் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.! அப்போ ரகளை இருக்கு

naane-varuven
naane-varuven

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்பொழுது மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.

உதாரணமாக கர்ணன்,அசுரன்,மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தினை சன் பிரிக்ஸ் தயாரிக்க மித்ரன் ஜகவர் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் பிரபல இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகவுள்ள வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வாத்தி படத்தின் டீசர் வெளியானது. மேலும் இதற்கு முன்பு ஹாலிவுட் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஷோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

மேலும் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் நானே வருவேன். கலைப்புலி.எஸ்.தானு அவர்கள் தயாரிப்பில் ஹீரோ,வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் நானே ஒருவன் திரைப்படத்தில் நடிகை இந்துஜா,பிரபு,யோகி பாபு, ஷெல்லி கிஷோர் ஆகியோர்களும் அடித்து வருகிறார்கள்.

மேலும் திரைப்படத்தின் இயக்குனரான செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ஒளிப்பதிவில் நானே ஒருவன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பாடலின் இறுதி கட்டப் பணிகள் தற்பொழுது முழு வீட்டில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரும்,பிக்பாஸ் தமிழ் போட்டியாளருமான ஆஜித் நானே வருவேன் படத்தில் முக்கிய இடத்தில் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இந்நிலையில் தற்பொழுது இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளை  தற்போது நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தார் ஆஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் செல்வராகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.