தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.
இது ஒரு பக்கமிருக்க நடிகர் தனுஷ் நடித்த விஐபி திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் கொடுத்த தகவல் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஆனது வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்தது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நாயகியாக அமலாபால் மற்றும் சமுத்திரக்கனி சரண்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள் அனிருத் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கஜோல் நடித்திருந்தார்.
ஆனால் முதல் பாகத்தை ஒப்பிடும் போது இரண்டாம் பாகம் சொல்லும்படி அதிக பிரபலம் கிடையாது இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி இருப்பது குறித்து உயர்நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்து உள்ளது. ஏனெனில் பொதுவாக எந்தவொரு திரைப்படத்திலும் மது புகை போன்ற பொருட்கள் பயன்படுத்தும் போது அவற்றிற்கு எச்சரிக்கை விளம்பரம் வருவது வழக்கம்.
ஆனால் இந்த திரைப்படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் போது எந்த ஒரு விளம்பர தடை இன்றி இடம்பெற்றுள்ளது இதனால் சட்டப்படி இந்த திரைப்படத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி அலெக்சாண்டர் அவர்கள் விஐபி திரைப்படத்தின் மீது புகார் அளித்துள்ளார்.
இவ்வாறு இந்த நோட்டீஸ் மூலமாக பொதுசுகாதார இயக்குனக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் இந்த புகாரின் மீது தமிழக அரசு எந்த ஒரு தாமதமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கும் படி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.