Actor Dhanush: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் என அனைத்து திறமையும் கொண்டவர். இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தனுஷ் தனது சிறந்த நடிப்பின் மூலம் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ஆம் ஆண்டு இந்திய தேசிய விருதைப் பெற்றார்.
இவர் 3 திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடலின் மூலம் யூடியூப் இணையத்தளத்தில் அதிகம் பேரால் பார்க்க பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார். இவர் தயாரித்த படங்கள் பல அதில் சில மாரி, தங்கமகன், அனேகன், வேலையில்லா பட்டதாரி, மரியான், எதிரர்நீச்சல், கொடி, வடசென்னை போன்றவையாகும். இதன் முலம் சிறந்த தயாரிப்பாளர் என்பதை நிலைநாட்டினார்.
தனுஷ் ஜகமே மந்திரம், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணைய உள்ளார்.
இந்நிலையில் தனுஷின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பா.பாண்டி திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்த ”ஷான் ரோல்டன்” வருடம் தோறும் பல திரைப்படங்கள் வெளியாகலாம், அவை அனைத்தும் பா.பாண்டி போல் இருப்பதில்லை, ஆக நல்ல அழுத்தமான பொழுதுபோக்கு நிறைந்த தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை தனுஷ் வடிவமைப்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.