தனுஷிற்கு ஏற்ப்பட்ட பெரும் இழப்பு.! கண்ணீருடன் வெளியிட்ட பதிவு

dhanush-cry
dhanush-cry

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனையடுத்து தனுஷ் கடைசியாக அசுரன், பட்டாசு ஆகிய திரைபடத்தில் நடித்திருந்தார் தற்போது நடிகர் தனுஷ் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகை மாளவிகா மோகனனுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் இவரது ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் தனுஷ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார்.

தினேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் உயிரிழப்பு என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் எனது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெளியிட்டுள்ளார்.