சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இவர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக சமூகவலைத்தள பக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவர் இயக்கப் போகும் திரைப்படத்தின் திரைக்கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் ஏற்கனவே தனுஷை வைத்து 3 என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர்.
அதன் பின்னர் கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற திரைப்படத்தை ஏகே உள்ளார் ஆனால் இத்திரைப்படம் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை இந்நிலையில் தற்போது அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த கதையை எடுக்க முயற்சி செய்து வருகிறாராம்.
அந்த வகையில் தனது மனைவி ஐஸ்வர்யா சொன்ன கதையை கேட்ட தனுஷ் நானே இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன் என்று கூறினாராம் ஆனால் அதன்பிறகு ஹாலிவுட் பாலிவுட் என பிஸியாக பல்வேறு திரைப்படத்தில் நடத்துவருவதன் மூலமாக கோலிவுட் திரைப்படத்தில் நடிக்க யோசிக்கிறாராம்.
ஆனால் நமது ஐஸ்வர்யா தனுஷை வைத்துதான் இந்த திரைப்படத்தை இயக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம் ஆனால் தனுஷோ இதை பற்றி கேட்டதற்கு ஒரு சில மாதங்களுக்கு பிறகு நடிக்கலாம் என கூறிவிட்டாராம். அந்தவகையில் இத்திரைப்படத்தை பிரபல லைக்கா நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் தான் எழுதி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.