பேப்பரை கசக்கி தூக்கி போடுவது போல் என் காதலை தூக்கி போட்டுட்டா. முதல் காதலை சொல்லி குமுறும் தனுஷ்

Dhanush
Dhanush

Dhanush First lovie : செல்வராகவன் இயக்கத்தில் உருவான “துள்ளுவதோ இளமை” என்னும் படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் தனுஷ். இந்த படத்தின் போது பலரும் தனுஷை விமர்சித்தினர் அதன் பிறகு நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் தனது திறமையை காட்டி வெற்றிகளை அள்ளினார்.

அப்படி இவர் நடித்த திருடா திருடி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வேலையில்லா பட்டதாரி, மாரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் தனுஷின் கெட்ட வித்தியாசமாக இருக்கிறது அவருடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார் மற்றும் பல திரைப் பட்டாளங்கள் நடித்துள்ளனர் இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்ச அளவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அண்மையில் கேப்டன் மில்லர் படத்திலிருந்து ஒரு சின்ன வீடியோவில் வந்து வைரலானது இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனுஷ் தன்னுடைய முதல் காதல் குறித்து பேசி உள்ளார் அதாவது 16 வயது இருக்கும் பொழுது பள்ளியில் படிக்கும் சமயத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண் மற்றவர்களை விட வித்தியாசமாக உணர்வதாகவும் மற்ற ஆண்களைப் போல அவளைக் கவர நினைத்து நிறைய விஷயங்கள் செய்தேன்.

Actor Dhanush
Actor Dhanush

ஒரு சமயத்தில் அந்த பெண் தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டார் ஒரு வருடம் நன்றாக தான் சென்றது திடீரென அந்த பெண் வேண்டாம் என என்னை தூக்கி எறிந்து விட்டார் பிறகு தான் தெரிந்தது அதெல்லாம் காதல் இல்லை   வெறும் கிரஸ்ஸாக இருக்கலாம் என்று நினைத்தேன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது காதல் என்பதை உணர்ந்தேன். வாழ்க்கையில் நேர்மையே சிறந்தது என தெரிவித்தார்.