அப்பாவை அப்படியே உரித்து வைத்தது போல் நடிகர் தனுஷின் மகன்..! வளர்ச்சியை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்..!

dhanush-son
dhanush-son

சினிமாவில் முக்கிய நடிகராகவும் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் பிரபல இயக்குனர் செல்வராகவனை தம்பி என்று கூறுவதை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்று கூறுவதுதான் பெருமை வாய்ந்துள்ளது.

ஆரம்பத்தில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் சொதப்பலான கதை அம்சமுள்ள திரைப்படங்களாக இருந்தாலும் தற்போது இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது.  இந்நிலையில் தற்போது தனுஷை வைத்து ஒரு திரைப்படமாக இயக்க மாட்டோமா என பல்வேறு இயக்குனர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதைதொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளது அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தனுஷின் மூத்த மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இவ்வாறு வெளிவந்த அந்த புகைப்படத்தில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா  தன்னுடைய மூத்த மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் அவரை பார்த்து நன்றாக வளர்ந்து விட்டார் என்று கூறி வருகிறார்கள்.

dhanush son
dhanush son

இவ்வாறு அவருடைய வளர்ச்சியையும் முகபாவனையும் பார்த்தால் இவர் தனுஷ் போலவே இருக்கிறார் என்று அவரை புகழ்வது மட்டுமில்லாமல் கூடிய விரைவில் இவரும் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.