தனது குடும்பத்திற்காக ஆசையை துளைத்து சினிமாவிற்கு வந்த நடிகர் தனுஷ்.!

dhanush
dhanush

Actor Dhanush: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் தற்பொழுது பான் இந்திய  நடிகராக கலக்கி வருகிறார். அந்த வகையில் தமிழைத் தொடர்ந்து பாலிவுட், ஹோலிவுட் என தொடர்ந்து நடித்து வருகிறார். தற்பொழுது இவருடைய நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய குடும்பத்துக்காக தனது ஆசையை விட்ட விஷயம் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதாவது பொதுவாக நடிகர் தனுஷுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்குமாம் இதன் காரணமாக சினிமாவைப் பற்றி கொஞ்சம் கூட தனுஷ் யோசிக்கவில்லையாம்.

சமையல் கலைஞராக வேண்டும் என்பதுதான் இவருடைய குறிக்கோளாக இருந்து வந்துள்ளது. ஆனால் இவருடைய தந்தை கஸ்தூரிராஜா கடன் தொல்லையில் அவதிப்பட்டு வந்த காரணத்தினால் வேறு வழி இல்லாமல் தனுஷ் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக தனது ஆசையை அப்படியே விட்டுவிட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இவருடைய நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான திரைப்படங்களை இவரது அண்ணன் செல்வராகவன் தான் இயக்கியிருந்தார். அப்படி கடந்த 2002ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் தனுஷ். இதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் திரைப்படத்தின் நடித்திருந்தார்.

இதில் இவருடைய சிறந்த நடிப்பு ரசிகர்களை தவிர 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதையும் கைப்பற்றினார். இவ்வாறு தொடங்கியதில் இருந்து தற்போது வரையிலும் சினிமாவில் கலக்கி வரும் தனுஷ் தமிழைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என வளர்ந்திருப்பது ஆச்சரியப்பட கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.