எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூரி நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவாணிஸ்ரீ நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இத்திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என நமது இயக்குனர் இளையராஜாவை அணுகி உள்ளார்.
பொதுவாக இளையராஜா பிரம்மாண்ட நடிகர்களின் படத்திற்கு தான் இசையமைப்பார் அந்த வகையில் அசுரன் விசாரணை போன்ற பல்வேறு திரைப்படங்களை உருவாக்கிய வெற்றிமாறனின் திரைப்படமும் நன்றாக தான் இருக்கும் என இளையராஜா இசை அமைக்க ஒப்புக் கொண்டாராம்.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தனுஷின் வெற்றிக்கு காரணமானவர் வெற்றிமாறன் தான். ஏனெனில் வெற்றிமாறன் பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் போன்ற பல்வேறு வெற்றி படங்களை தனுஷ் இருக்க கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் பாட ஒப்புக்கொண்ட தனுஷ் இளையராஜாவிடம் காலை 11 மணி முதல் 3 மணி வரை பயிற்சி எடுத்துள்ளாராம். இவ்வாறு நான்கு மணி நேரப் பயிற்சியில் கொஞ்சம் கூட சோர்வு இல்லாமல் இந்த பாடலை நடிகர் தனுஷ் மிகவும் பிரம்மாண்டமாக பாடி முடித்து உள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெற்றி மாறன் கூறியுள்ளார்.