சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்த நடிகர் தனுஷ்..! ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த “வாத்தி படம்” ..

dhanush
dhanush

சினிமா உலகில் எப்போதுமே போட்டிகள் அதிகம் ஒரு சிலர் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்வார்கள் ஒரு சிலர் சைலண்டாக போட்டி போடுவார்கள் அந்த வகையில் நடிகர் தனுஷ் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்தாலும் தனது படங்களின் மூலம் மாஸ் காட்டுவார்.  அந்த வகையில் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள்..

ஒவ்வொன்றும் பெரிய அளவில் வெற்றி பெறுவதோடு தனுஷ் நடிப்பும் மெருகேற்றிக் கொண்டே போகிறது இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நானே வருவேன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் வெளிவதற்கு முன்பாகவே படத்தின் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி லாபம் பார்த்தது தற்பொழுது நல்ல வசூல் பேட்டை நடத்தி வருவதால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் வாத்தி. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

சமீபத்தில் கூட வாத்தி படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வாத்தி படம் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளி வருவதற்கு முன்பாகவே விற்பனையை தொடங்கியுள்ளது ஆம் தனுஷின் வாத்தி படம் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை மட்டுமே 50 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாம் மேலும் தமிழ்நாடு உரிமை 30 கோடி தெலுங்கு 15 கோடி..

கர்நாடகா மூன்று கோடி, கேரளா ஒரு கோடி, வெளிநாட்டு உரிமை 10 கோடி ஆடியோ ரைட்ஸ் மூன்று கோடி வியாபாரமாகியுள்ளது மொத்தமாக ரிலீஸ் ஆகும் முன்பே 127 கோடியே வியாபாரம் ஆகியுள்ளதாம்.    சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் வியாபாரத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது பிரின்ஸ் படம் ரிலீசுக்கு முன்பாக 90 கோடியை வியாபாரம் ஆகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.