இந்த காரணத்துக்காக ரசிகர்களுக்காக தயாரிப்பாளரை எதிர்த்த தனுஷ்.! பாராட்டும் ரசிகர்கள்..

dhanush actor
dhanush actor

actor dhanush respect people and given tension to producer:நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தற்பொழுது பரியேறும் பெருமாள் என்ற வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த நிலையில் தனுஷ் கர்ணன் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு இரண்டு மடங்கு செலவு வைத்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

கர்ணன் திரைப்படத்தில் திருநெல்வேலியில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வந்தது ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்ததால் கர்ணன் திரைப்படத்திற்காக போடப்பட்ட செட் அழிந்துவிட்டதால் புதிய செட் போட்டு படப்பிடிப்பு எடுத்து முடித்து விடலாம் என படப்பிடிப்பு குழு திருநெல்வேலிக்கு சென்றுள்ளது. ஆனால் திருநெல்வேலி மக்கள் அனைவரும் இங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது என அதிரடியாக முற்றுகையிட்டு உள்ளார்கள்.

திருநெல்வேலியில் சென்னையிலிருந்து வரும் மக்களால் கொரோனா பரவுகிறது என்ற அச்சத்தில் படப்பிடிப்பு இங்கே எடுக்கக் கூடாது என அதிரடியாக கூறியுள்ளார்கள், அதனால்தான் கர்ணன் பட குழு திரும்பி சென்னைக்கு வந்துள்ளது இதுகுறித்து தனுஷ் காதுக்கு போக தனுஷ் உடனடியாக மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை போல் மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அங்கே எடுக்க வேண்டாம் என அதிரடியாக கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அந்த செட்டை சென்னையிலேயே போட கூறிவிட்டாராம் தனுஷ்.

இதனால் தயாரிப்பாளருக்கு இரண்டு மடங்கு செலவு தான் அதிகரித்துள்ளது ஏனென்றால் திருநெல்வேலியில் ஏற்கனவே செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு எடுக்க முடியவில்லை ஆனால் அதன் பிறகு மீண்டும் சென்னையில் அதுபோல் செட் போட அதிக செலவு ஆகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

நடிகர் தனுஷ் கொஞ்சம் தயாரிப்பாளர் நிலைமையும் புரிந்துகொள்ளுங்கள் என தயாரிப்பாளர் தனது மனதுக்குள்ளே புலம்பி வருகிறாராம்.