நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் இயக்கும் திரைப்படத்திற்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் வெற்றிமாறன் தனுஷ் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டடித்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி குறித்து ஒரு நேர்காணலில் தனுஷ் பேசியுள்ளார் அந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அப்பொழுது தனுஷ் பேசியதாவது என்னுடைய லைஃபில் நான் ரொம்ப நம்பிக்கை வச்சிருந்த நாலு பேர்ல ஒருத்தர் வெற்றிமாறன் மீதி மூன்று பேரும் பெண்கள்தான் ஆனால் அவர்கள் அவ்வளவு நம்பிக்கையையும் உடைத்து விட்டார்கள் என்னுடைய நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஒருவர் வெற்றிமாறன் தான். இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் வெற்றியை சுவைத்து பார்த்த பிறகு என்னை மறந்துவிட்டு போனவரை எனக்கு தெரியும்.
ஆனால் இதைவிடப் பெரிய வெற்றியைப் பார்த்த வெற்றிமாறன் தனுஷை விட்டு நான் வரமாட்டேன் என்று கூறிக்கொண்டு இன்னும் என் கூட தான் இருக்காரு என வெற்றிமாறன் உடனான நட்பை தனுஷ் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தனுஷ் பேசியதை வைத்து ரசிகர்கள் பலரும் அந்தப் பெண் அவரின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவாக தான் இருக்கும் என பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.