கோதாவில் குதிக்க போகும் தனுஷ்.! அடுத்தடுத்து ரிலீஸாகும் நான்கு திரைப்படங்கள்.! இதோ மாஸ் அப்டேட்

dhanush
dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என தமிழ் சினிமாவில் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது, கார்த்திக் சுப்பராஜ் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வகையில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் சுகமானது ஜகமே தந்திரம் என பதிவிட்டிருந்தார் அதாவது அவர் கூற வந்தது ஊரடங்கு உத்தரவுகள் முடிந்ததும் இந்தியாவின் இயல்பு நிலை திரும்பியதும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷிற்கு பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படமும் இந்த ஊரடங்கு முடிந்தவுடன் ரிலீசாகும் என கூறியிருந்தார்கள், இதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன்  இயக்கத்தில் D43 என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்படி தனுஷிற்கு அடுத்த அடுத்த நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் படத்தை காணுவதற்கு ஆவலுடன் இருக்கிறார்கள்.