படம் ஹிட்டானதால் அதே இயக்குனரை வளைத்துப் போட்ட தனுஷ்.! அடுத்த அவார்டுக்கு ரெடியாகி விட்டார் போல

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் தான் அந்தவகையில் அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.

இத்திரைப்படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார். அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  கர்ணன் திரைப்படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் அவர்களின் கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது என்று தான் கூற வேண்டும். அதோடு பல திரை பிரபலங்களும் இருவரையும் நேரில் சந்தித்து தங்களது பாராட்டுக்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில் தான் தனுஷ் கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு ஐந்து திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் தற்போது ஹாலிவுட்டில் த கிரேட் மேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்க உள்ளாராம் இந்த தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ். அந்தவகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்பதையும் கூறி உள்ளார் தனுஷ்.

maari selvaraj and dhanush
maari selvaraj and dhanush

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அத்திரைப்படத்திற்காக எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.