சினிமாவிற்கு அறிமுகமாகி பல எதிர்ப்புகளுக்கு பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் சினிமாவில் தற்பொழுது உச்ச நட்சத்திரமாகவும், தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்பொழுது உலக அளவிலும் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு மெல்ல மெல்ல சினிமாவில் வளர்ந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு தற்பொழுது யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமண உறவை முறித்துக் கொண்ட நிலையில் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் தனுஷின் சொந்த வாழ்க்கையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓடி வருகிறார். மேலும் திருமணம் முறிவிற்கு பின்னரும் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தனுஷ் ரசிகர்களுக்கு முக்கியமான அட்வைஸ்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் நடிகர் கார்த்திக் இவர் யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்திருந்தார். அதிலிருந்து சில வருடங்களுக்குப் பிறகு கார்த்தியின் மனைவி பாடகி சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் தன்னை தவறாக கையாண்டதாகவும் அதனால் தனக்கு ஏற்பட்ட காயங்கள் என்றும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்த நிலையில் இது மிகப்பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
எனவே இது குறித்து தன்னுடைய மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய ட்விட்டரை வேறு ஒருவர் ஹேக் செய்து விட்டதாகவும் கார்த்தி அறிவித்திருந்தார். அந்த சமயத்தில் சுசித்ரா மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வந்த நிலையில் ஏராளமான நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் கார்த்திக் மற்றும் சுசித்ரா இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தனுஷ் இது பற்றி எதுவும் வாயைத் திறக்கவில்லை. இவரை அடுத்து நடிகை அமலாபால் மற்றும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி என பலருடனும் தனுஷ் நெருக்கமாக பழகி வருவதாகவும் பல தகவல்கள் பரவியது.