விஜயை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் தனுசும் நடிக்கவுள்ளாரா.! வெளிவந்த மாஸ் தகவல்

vijay and dhanush
vijay and dhanush

தென்னிந்திய சினிமாவில் மிகவும் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இதற்கு காரணம் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. அதோடு வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் அசுரன்,கர்ணன் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்து கூறும் வகையில் இருந்தது. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் இவரின் திரை வாழ்க்கையை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விரைவில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி வெளியாக தயாராக உள்ளது.

அதன் பிறகு இவர் உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படக்குழுவினர்கள் தயாரித்து வரும் த கிரே மேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதோடு மூன்று வருடங்களுக்கு 9 திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அந்த வகையில் தெலுங்கு படமொன்றிலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இத்திரைப்படத்தை சேகர் கம்மலு இயக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷிற்கு முன்பே விஜயும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  விரைவில் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.