தென்னிந்திய சினிமாவில் அனைத்து நடிகர்களை விடவும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து வருவதால் அனைத்து முன்னணி தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திரைப்படங்களில் தனுஷை நடிக்க வைக்க விரும்புகிறார்கள்.
அந்தவகையில் தனுஷும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக கர்ணன் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வந்த த கிரே மேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷின் அடுத்த அடுத்த திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் நரேன் கூட்டணியில் பெயரிடாத D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 40% முடிந்துவிட்டது. எனவே இத்திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் செல்வராகவனுடன் கைகொடுத்து உள்ளார். இவர்களின் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்தது.
ஆனால் தற்போது செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடித்துவரும் சாணி காகீதம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருவதால் இன்னும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடியவில்லை என்றும் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படம் இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தனுஷ் செல்வராகவன் திரைப்படத்தை விட்டுவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் முன்பே போட்டிருந்த ஒப்பந்தத்தின் படி மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் D44 திரைப் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் இவர்களின் கூட்டணி இத்திரைப்படத்திற்கு முன்பே யாரடி நீ மோகினி உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்களில் ஒன்று சேர்ந்து இருந்தார்கள். எனவே சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் கைகோர்த்து உள்ளார்கள். இத்திரைப்படத்தில் அனிருத் தான் இசை அமைக்க உள்ளார்.