தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ்.இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். இவர் தமிழில் இருந்து பாலிவுட்டில் அறிமுகமானார். இந்நிலையில் தற்பொழுது ஹோலிவுடுக்கும் அறிமுகமாகி இந்திய சினிமாவில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு 9 திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது ஹோலிவுட்டிலும் தனது கால் தடத்தைப் பதித்துள்ளார். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர் ராசோ பிரதர்ஸ் இயக்கி வரும் த கிரே மேன் திரைப்படத்தில் தான் தனுஷ் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவெஞ்சர்ஸ் கேப்டன் அமெரிக்கா ஸ்டிவ் ரோஜரஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் சூட்டிங் சில நாட்களாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் அமெரிக்காவில் இன்னும் 2 மாதங்களுக்கு இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் என்று தெரிவித்துள்ளார்கள். அதோடு இத்திரைப்படம் பிரபல நெட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் தனுஷ் மிகவும் ஸ்டைலாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.