தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் சிம்பு பட நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார் மேலும் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதமேனன் ஆகிய அவர்களுக்கு வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் விலை உயர்ந்த கார் மற்றும் பைக் பரிசாக தந்திருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர் தான் நடிகை சித்தி இத்னானி. இவர் தான் தற்பொழுது நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த கிரகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் இளன்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த பியார் பிரேமா காதல் என்ற ரொமாண்டிக் திரைப்படத்தினை எடுத்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். இந்த வெற்றி திரைப்படத்தின் தொடர்ந்து தற்பொழுது இவர் நடிகர் தனுஷை வைத்து திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சித்தி இத்னானி நடிக்க இருக்கிறார் மேலும் இந்த படத்தினை போனி கபூர் தயாரிக்க இருப்பதாகவும், ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்களாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை விரைவில் பட குழுமங்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.