தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் திடீரென மொட்டை அடித்து இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட் முன்னணி நடிகராக வலம் வந்த இவர் சமீப காலங்களாக ஹாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது இவர் சாணிக்காகிதம், ராக்கி போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
அந்த வகையில் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியான ஒரே நாளில் ட்விட்டர் பக்கத்தில் மட்டும் 100k பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தனுஷ் தனது மகனுடன் திருப்பதிக்கு சென்று இருந்த நிலையில் சாமி தரிசனம் செய்த பிறகு வெளியில் வந்த இவரை ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்தனர்.
அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக தாடியும் மீசையுமாக இருந்த தனுஷ் திருப்பதி கோவிலில் மொட்டை அடித்தது தெரியவந்துள்ளது. எனவே மொட்டை அடித்த தலையில் தொப்பி உடன் மாலை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தனது மகன் யாத்ரா, லிங்கா உடன் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் தனது 50வது படமான கேப்டன் மிர்லர் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடிக்க இருக்கும் நிலையில் இதனை அடுத்து பாலிவுட் சினிமாவில் அறிமுகம் செய்த ரஞ்சனா இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.