தனுஷ் நடித்துள்ள நான்கு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் தனுஷ் இல்லையாம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

dhanush-1
dhanush-1

தற்பொழுது கோலிவுட், ஹிலிவுட், பாலிவுட் என தொடர்ந்து அனைத்து திரை உலகிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ்.  இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் நடித்துள்ள 4 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.இவ்வாறு  வெளியாக இருக்கும் இந்த நான்கு திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் இல்லையாம் எனவே ரசிகர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “தி க்ரேமேன்”என்ற திரைப்படம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் தமிழ் உட்பட சில இந்திய மொழிகளிலும் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதம் இருபத்தி எட்டாம் தேதி நெட்ப்ளிக்ஸ் போட்டி வழியாக வெளியாக இருக்கிறது.எனவே மிகவும் விறுவிறுப்பாக இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நான்கு திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாக உள்ள நிலையில் அந்த நான்கிலும் தனுஷ் இடம்பெறாமல் இருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருந்தாலும் விரைவில் தனுஷ் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.