மாறன் திரைப்படத்தில் நடித்ததற்காக தனது கணவனை கட்டிப் பிடித்து அழுத பிரபல நடிகை.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் தனுஷ் இவர் தொடர்ந்து கோலிவுட், ஹிலிவுட்,பாலிவுட் என தொடர்ந்து அனைத்து திரையுலகிலும் நடித்து கலக்கி வருகிறார்.தற்போது உள்ள நடிகர்களில் இவர் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள இவர் தொடர்ந்து நடித்துவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளிவருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைப்படம் தான் மாறன்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அண்ணன் தங்கை பாச உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தினை பதினாறு,மாஃபியா போன்ற திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். முதன்முறையாக கார்த்திக் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்திருந்தால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்தார்கள் ஆனால் கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இத்திரைப்படம் ஓடிடி-யில் வெளியானது. எனவே இணையதளவாசிகள் இதற்குமேல் திரைப்படங்களைப் பார்த்து விட்டு தான் வாங்க வேண்டும் என்று நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறி வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் சமுத்திரகனியின் உதவியாளராக பிரபல நடிகர் போஸ் வெங்கட் நடித்திருந்தார்.

poss vengat

அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் இந்த திரைப்படத்தினை பார்த்ததும் எனது மனைவி என்னை கட்டிப்பிடித்து அழுதாள்.நான் ஏன் என்று கேட்டேன் அதற்கு அவள் இதேபோல 2007ஆம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் நீங்கள் ஒரு அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருந்தார்கள்.

தற்பொழுதும் மாறாமல் அதே வேடத்தில் நடித்து உள்ளீர்கள் இன்னும் நீங்கள் சினிமாவில் வளரவில்லை என்று கூறிவிட்டதாகவும் நீங்கள் திரைப்படத்தின் கதைகளை  தவறாக தேர்ந்து எடுப்பதாகவும் கூறினாராம் இதனை நடிகர் போஸ் வெங்கட் வெளிப்படையாக அனைவர் முன்பும் கூறினார்.

Leave a Comment

Exit mobile version