தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் செல்வராகவனின் தம்பி மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது மட்டுமின்றி தயாரிப்பு, பாடல் என பன்முகத்திறமை கொண்டவர். அந்த வகையில் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமான கதாபாத்திரம் இருப்பதன் காரணமாக தொடர் வெற்றியை கண்டு வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி தற்போது ஹாலிவுட் என மாஸ் காட்டி வரும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஏற்கனவே இவர் 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்தி சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த நமது நடிகர் இதனைத் தொடர்ந்து இந்தியில் சோனம் கபூருடன் இணைந்து ரஞ்சனா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் சுரேஷ் அவர்கள் இயக்கும் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் தனுஷை நடிக்க கேட்டுள்ளாராம் அதற்கு கதை கேட்டவுடன் தனுஷ் ஓகே சொல்லிவிட்டாராம். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரங்குதே படத்தை இயக்கிய வெங்கி இயக்க இருக்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
இவ்வாறு தொடர்ந்து தெலுங்கில் மூன்று திரைப்படத்திற்கு மேல் நடிகர் தனுஷ் நடிக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது.